குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, December 14, 2013

குலாலர் இளைஞர் படை

அன்புள்ள குலாலர் குல சிங்கங்களே !!!
,
தமிழ் மண்ணில் ஏறக்குறைய 40 லாச்சம் மக்கள் தொகை கொண்ட " குலாலர்" சமுதாயம் வாழ்ந்து வரும் போதிலும் , நம்மிடம் ஒற்றுமை , இன உணர்வு இல்லாத காரணத்தால் தமிழகத்திலேயே கல்வி அறிவில் கடைகோடியாகவும், ஏழ்மை நிலையில் முதலாவதாக
வும் உள்ளோம்.

நம் இனத்தில் இருக்கும் ஒரு சில படித்த இளைஞர்களும் நம் சமுதாய மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்ய தவறுவதால், நம் மக்கள் இன்று ஏனைய மக்களால் வஞ்சிக்கப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ளனர் .
எனவே இவ்வினத்தை காப்பது நம் தலையாய கடமை. நம்மவர்களை போல இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் நம் சமுதாய மக்களுக்கு ஏதாவது சிறிய உதவியாவது செய்ய முடியும் என்று எண்ணுகின்றனர் .

எனவே முதலில் " திருநெல்வேலியை " மையமாக கொண்டு சில குலாலர் குல சிங்கங்களின் ஆலோசனை பேரில் நமக்கென்று ஒரு இயக்கம் தொடங்க ஆலோசனை செய்து உள்ளோம் .
நம்மிடம் பண பலம் இல்லை , அரசியல் செல்வாக்கு இல்லை 

நம் அனைவரும் சந்திக்க திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள குலாலர் மடத்தில் சந்திக்க எற்படு செய்யப்பட்டுள்ளது

நாள் 22.12.2013

வரவிருக்கும் இளைஞர்கள் உங்கள் தெலைபேசி என்களை கொடுக்கவும்

தெடர்புக்கு 09933232655. 

நம் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வு நம் இளைஞர்களுக்கு பெருகி வருகிறது .

இனியும் நம் இனத்தில் இருக்கும் பிரிவுகளை மறந்து ஒன்று சேர ஒரு இயக்கம் நமக்கு தேவைபடுகிறது என்று பலர் நம் இனத்தில் எண்ணுகிறார்கள் . எனவே நாம் நம் இன இளைஞர்களை கொண்டு ஒரு இயக்கம் தொடங்கலாம் என்று முடிவு எடுத்துள்ளோம் . படித்த இளைஞர்களால் நம் இனத்தில் தொடங்க படும் முதல் இயக்கம் இதுவே .

"குலாலர் இளைஞர் படை " என்ற பெயரில் சேர உள்ளோம் . இதற்கு தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்து இதில் தங்களை இணைத்து இம்மக்களுக்காக ஒரு சிறிய உதவி நம்மால் முடிந்த அளவு செய்வோம் . பொழுது போக்குகாக பல மணி நேரம் செலவிடும் நாம் , ஒரு நாள் செலவிட்டு , ஏழ்மையில் இருக்கும் நம் மக்களை , செல்வந்தவர்களாக, படித்தவர்களாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது .

நாம் கொடியை பிடித்து போராட்டம் செய்ய வேண்டும் 
, அரசியல் பேச்சு கூட நமக்கு வேண்டாம் . நம் இனத்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய ஒன்று சேருவோம் ...

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைய தலை முறையினர் உங்கள் தெலைபேசி என்களை கொடுக்கவும்
வழி நடத்த மூத்த இளைஞர்கள் தயவு செய்து இணைய அன்போடு கேட்டு கொள்கிறேன் ..

வாழ்க குலாலர் 
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன்சாலிவாகனன் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி

Monday, October 14, 2013

அறிஞர் அண்ணா விருது பெற்ற குலாலர் விவேகாநந்தன்


வீரதீர செயலுக்காக் அறிஞர் அண்ணா விருது பெற்ற குலாலர் விவேகாநந்தன்







மேலப்பூங்குடி குலாலர் சங்கம்



மேலப்பூங்குடி குலாலர் சங்கம்  இராமர் தேர் திருவிழா காரைக்குடி : மரத்தால் மட்டுமே தேர் செய்யப்பட்டு வந்த நிலையில்,காரைக்குடியை சேர்ந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ரகுமத்துல்லா என்பவர், இரும்பிலான தேரை, மேல பூங்குடியை சேர்ந்த "குலாலர்' சமுதாயத்தினரின் பஜனைக்காக செய்து கொடுத்துள்ளார்.
ராஹிலா இன்ஜி., ஒர்க்ஸ் உரிமையாளர் ரகுமத்துல்லா கூறும்போது: இதற்கு முன்பு தேர் செய்ததில்லை.ஒரு முயற்சியாகத்தான் இறங்கினோம்.நான்கு பேர்,ஒரு மாதம் சேர்ந்து தேரை உருவாக்கினோம்.எனது நண்பர் கருணாநிதி,சங்கர் உதவி செய்தனர்.
இதற்காக 2 டன் இரும்பு தகடு தேவைப்பட்டது.
கோபுர ஆர்ச் பகுதியில், 20 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள பீடத்தில், சுவாமி சிலையை வைத்து கொண்டு, உள்ளே இருவர் அமரலாம். ராமரை பஜனை செய்து செல்வதற்காக தேர் செய்யப்பட்டதில் மகிழ்ச்சியே.
மேலப்பூங்குடி ரத்தினம் கூறியதாவது: எங்கள் பகுதி இளைஞர்களின் முயற்சியால் இந்த தேர் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகியுள்ளது. புரட்டாசி மாத பஜனையின்போது, ராமர் சிலையை இதில், வைத்து ஊருக்குள் இழுத்து செல்வோம். ஏற்கனவே மாட்டு வண்டியில், ராமர் சிலை வைத்து பஜனை செய்தோம்.தற்போது இரும்பிலான தேர் செய்துள்ளோம்,என்றா
ர்

தேனி வீரபாண்டி முல்லை மஹால் திற்ப்பு விழா 2013













குலாலர் கூட்டுறவு வங்கி , சென்னை









Wednesday, October 9, 2013

மாயாண்டி சுவாமிகள் குரு பூஜை விழா



குரு பூஜை விழா 




வருகிற 10 10 -2013, கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள் குரு பூஜை விழா குலால குல போராளிகலே வருக!! வருக!! என வரவேற்கிறோம் இவன் குலாலர் தளம்

Monday, September 30, 2013

விருதுநகர் மாவட்ட குலாலர் சங்கம்





குலாலர் சங்கம்




குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 3–வது ஆண்டு விழா

மண்பாண்டங்களின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குலாலர் சங்கம் தீர்மானம்

நெல்லை
மண்பாண்டங்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்க கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 3–வது ஆண்டு விழா பாளையங்கோட்டையில் நடந்தது. நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் தலைவர் சேம நாராயணன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, தொழில் அதிபர்கள் நடராஜன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடலைமுத்து என்ற சேகர் வரவேற்று பேசினார். தமிழ்நாடு குலாலர் சங்க தலைவர் ஹரிஹரன் சிவாச்சாரியார், ஆறுமுக நம்பி ஆகியோர் குலாலரின் சிறப்பு பற்றி பேசினர்.
நலத்திட்ட உதவிகள்
இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், உலோக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் வரவால் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க நிதி உதவியும், தொழிற்கூடம், விற்பனைக்கூடங்களை அரசு கட்டித்தர வேண்டும். மண்பாண்டங்கள் செய்வதற்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரம் இலவசமாக வழங்க வேண்டும். பழமைவாய்ந்த மண்பாண்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை மாவட்ட துணை செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட பொருப்பாளர் அய்யப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Monday, September 23, 2013

குலாலர் முரசு

குலாலர்களின் அனைத்து நிகழ்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள படியுங்கள் குலாலர் முரசு,
குலாலர் நிகழ்ச்சிகள், செய்திகள் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண தகவல் மற்றும் விளம்பரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் குலாலர் முரசில் வெளியிட கீழ்கண்ட நபரை முகவரியிலோ, தொலைப்பேசியிலோ அல்லது மின் அஞ்சலிலிலோ தொடர்பு கொள்ளவும்.

M.ராமசுப்பு (எ) மணி
9, முதல் மெயின் ரோடு, செல்வராஜ் நகர்,
திருநின்றவூர் - 627 003
செல் 9444981032

குலாலர் சிங்கங்களுக்கு

குலாலர் சிங்கங்களுக்கு

 
நம்மில் சிலருக்கு நம்முடைய இனத்தவருக்கு இன உணர்வு இல்லையே என்ற ஒரு ஆதங்கம் இருக்கலாம். அவ்வாறு நினைபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நம் இனத்தவர்கள் இன உணர்வை இழந்து பல நூற்றுகணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று ஒரேநாளில் நாம் அவர்களுக்கு இன உணர்வை ஏற்படுத்த முடியாது. அனால் ஓன்று மட்டும் நிச்சயம் இதுவரை தான் யார் என்றே உணராதவர்கள் ஒருசில இளைஞர்களின் எழுச்சியால் தன் பலம் என்னவென்று உணரத்துவங்கி உள்ளனர்.அதற்கு அடையாளம்தான் தான் இன்ன ஜாதி என்று சொல்லிக்கொள்ள தயங்கியவர்கள் இன்று நான் குலாலர் இனம் என்று பெருமையாக சொல்லிகொள்ளும் அளவிற்கு வந்துவிட்டார்கள் இன்னும் போகப்போக மாபெரும் சக்தியாக நம் குலாலர் இனம் உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்".
அந்த நிலையை அடையும்வரை நாம் தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துகொள்வோம்

மதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு

மதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு : மாநில தலைவர் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து விவாதிக்க மதுரையில் பொதுக்குழு நடைபெற உள்ளதாக குலாலர் சமுதாய மாநில தலைவர் தெரிவித்துள்ளார்,

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவை எங்கள் அமைப்பு ஆதரித்தது. மண்பாண்ட தொழிலாளர் களுக்கான நலவாரியம் அமைத்து தரப்படாத நிலையில் நெல்லை மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் மண்பாண்டம் செய்ய தேவையான குளத்து மண் அள்ள அனுமதி வழங்க படவில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டது.

மாநில அளவில் தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட எங்கள் அமைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்க மதுரையில் வருகிற 22ம் தேதி பொதுக்குழுவை கூட்டியுள்ளோம் ,அதில் நாடாளுமன்ற தேர்தலில யாருக்கு எங்கள் ஆதரவு என்பகு குறித்தும், 2014 ஜனவரியில் முதலாவது மாநில மாநாடு நடத்துவது குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார் பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Monday, September 9, 2013

குலாலர் ஸ்ரீ சூழக்கரை காளியம்மன்

                                                          பருக்கைக்குடி


குலாலர் ஸ்ரீ சூழக்கரை  காளியம்மன்  17 ஆம் ஆண்டு  பொங்கல் வழா









































Thursday, July 18, 2013

அஞ்சாசிங்கம் குலாலன் M.பெரிய வீரன் Ex MLA


                                           அஞ்சாசிங்கம் குலாலன் M.பெரிய வீரன் Ex MLA.,


அச்சம் என்பது மடமையடா..அஞ்சாமை திராவிடர் உடமையடா..

தேனி மாவட்டத்தில். பெரியகுளம் தொகுதி ஓர் அழகிய தொகுதி பச்சை பசேரென தென்னை மரங்களும், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைகானலும் உட்பட்ட தொகுதி. இப்பகுதியில் கள்ளிப்பட்டி என்னும் கிராமம் அக்கிராமத்தில் பெரிய குடும்பம் என்றழைகின்ற அரசன் குலாலர் குடும்பம் ஏராளமான வயல் வெளிகளுடன் பண்ணையாருக்குரிய மதிப்பு கொண்டது அவரின் குமாரர் முத்து பையம்மாள் தம்பதியரின் மகனாக 1956 ம் ஆண்டு டிசம்பர் 11 ல் பிறந்தார் வீராச்சாமி எருது கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த குடும்பம். கால சக்கரத்தால் வழக்கு நீதிமன்ற படிகளில் ஏறியது . அதனால் சொத்துகளும். சுகங்களும் பறந்தோடன. குலத்தொழிலான மண்பாண்ட தொழில் அவர் குடும்பத்தை பசியாற வைத்தது .
நீண்ட நெடுந்தோளும், அகண்ட மார்பும் அனைத்து அம்சங்களுடன் வளர்ந்த வீராச்சாமி கடினமாக உழைத்தார்.கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதால் குடும்பம் மீண்டும் தழைந்தது மண்பாண்ட தொழிழும் நாட்டு செங்கல் உற்பத்தியை துவங்கினார். சிறுவயது முதலே எம் . ஜி . ஆர் நடித்த திரைப்படங்களில் ஆர்வம் மிக்கவர் அவரின் தீவிர ரசிகரும் ஆவார். அவரைப் போலவே அஞ்சா நெஞ்சம் கொண்டவராக வளர்ந்தார். சமூக ஈடுபாடு ஏழைகளுக்கு உதவுதல். அனைத்து சமூகத்தினருடன் பழகுதல் போன்ற குணங்கள் குலாலானுக்கு பிறப்பிலே உண்டு எம் .ஜி .ஆர். புதிய கழகத்தை துவங்கி தமிழக முதல்வராக பதவி ஏற்றபின் கட்சி நடவடிக்கைளில் பங்கு கொண்டார் 1980 ல் தீவிர அரசியலில் பங்கு கொண்டவர்.எம் .ஜி .ஆர்ன் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து காவலர் களுடன் துணிந்து போராடினார். பின்னர் சிறைவாழ்க்கை முடிந்து வீடு திரும்பியவர் தீவிர அரசியலில் வீறுகொண்டு எழுந்தார் இவரின் தீவிர அரசியல் பணி நேர்மை இவற்றை கண்ட அப்போதைய அமைச்சர் இராஜா முகம்மது சிறை சென்றவர் களுக்கான பாராட்டு விழாவில் இவருக்கு பெரிய வீரன் என்று பெயர் சூட்டினார்.
அன்றிலிருந்து வீராச்சாமி என்ற பெயர் பெரிய வீரன் என மாறியது.
வாழ்வில் பெயர் மட்டும் மாறவில்லை அவரின் அரசியல் பணிக்கு கிடைத்த அச்சாரமாக பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக கட்சியின் பொது செயலர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டார். அனைத்து சமூக ஆதரவுடன் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜந்து வருட அரசியல் வாழ்க்கையில் ஆதாயம் தேடாதவர். கறை படியா கைக்கு சொந்தக் காரர். தாம் பதவி வகித்த காலத்தில் குலாலர் மக்களின் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவார்

23 வருடங்கள் அரசியலில் இருந்தாலும், தனக்கென எதையும் சேர்த்து வைக்கும் எண்ணம் இல்லாதவர்

நம் இனப் பிரமுகர் எம். பெரியவீரன் நம் சமூக மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். எங்காவது நம் சமூக மக்கள் பிற சமூக மக்களால் நசுக்கப்படம் போது தனது அரசியல் பலத்தால் அவற்றை முறியடித்து குலால மக்களுக்கு உதவி புரிகிறார்.
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னன் இவனென போற்றி புகழ வேண்டும். என்ற எம்.ஜி. ஆர் பாடிய பாடலின் வரிகளுக்கு சொந்தகாரரான அஞ்சாசிங்கம் குலாலன் M.பெரிய வீரன் Ex MLA அவர்களை குலாலர் தளம் வாழ்த்துகிறது

Sunday, July 14, 2013

குலாலர் சமுதாய ஆவணப்பட வெளியிட்டு விழா

பிரம்மாக்கள் குலாலர் சமுதாய ஆவணப்படம் உங்களுக்காக You Tubeல் 

குலாலர் சமுதாய ஆவணப்பட வெளியிட்டு விழா குலால குல போராளிகலே வருக!! வருக!! என வரவேற்கிறோம்  இவன்  குலாலர் தளம்







Saturday, July 6, 2013

குலாலர் சமுதாயக் கூடம் திறப்பு விழா



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தலூகா ஆவரம்பட்டி
திருநீலகண்டர் குலாலர் சமுதாயக் கூடம் திறப்பு விழா








குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்

          குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்

06 July 2013 02:00 

திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சியில் அனைத்து குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதன் தலைவர் ஏ. பெருமாள் தலைமை வகித்தார். கழகம் சார்பில் 7-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவை வரும் ஆகஸ்ட் இறுதியில் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற குலாலர் மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் என். வேல்முருகையன், முத்துகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகன், கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Friday, June 28, 2013

நிர்வாகிகள்

நிர்வாகிகள்


திருவள்ளூர்சேலம் திருச்சிராப்பள்ளிசிவகங்கை 
சென்னைநாமக்கல் பெரம்பலூர்மதுரை
காஞ்சிபுரம்ஈரோடு அரியலூர்தேனி
வேலூர்திருப்பூர் கடலூர்விருதுநகர்
கிருஷ்ணகிரிநீலகிரி நாகப்பட்டினம்இராமனாதபுரம்
தர்மபுரிகோயம்புத்தூர் திருவாரூர்தூத்துக்குடி
திருவண்ணாமலைதிண்டுக்கல் தஞ்சாவூர்திருநெல்வேலி
விழுப்புரம்கரூர் புதுக்கோட்டைகன்னியாகுமரி


குலாலர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும்  குலாலர்களின் இணைப்பு பாலமாகவும்,சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுகசெய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "குலாலர் தளம்"தொடர்ந்தது தனதுசமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம்

தொடர்புக்கு

கைபேசி.




மின்னஞ்சல்: sundarkulalar@gmail.com



Thursday, June 20, 2013

மாவீரன் சாலிவாகனன் உருவச் சிலை




                                     ஆந்தர மாநிலத்தில் உள்ள சாலிவாகன அசிரமம்த்தில் 
                                       மாவீரன் சாலிவாகனன் உருவச் சிலை      திறப்பு
                              கொங்கு குலாலர் சங்கம் சர்பில் சிலை திறந்து வைக்கப்பட்டது

குலாலர் கவி சர்வக்ஞர் கூறும் அறம்


நம் நாட்டில் பழங்காலத்தில் இருந்து அறம் மற்றும் நீதிக்குத் தான் முதலிடம். முக்தி அடைவதுதான் அக்கால மனிதர்களின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. அதற்கு முக்கியமான கருவி அறம். இந்த மனித உலகில் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் அற இலக்கியங்களின் முக்கிய நோக்கமாகும்.
தார்மிகக் காவியங்களும் சாஸ்திர நூல்களும் கூறுவது இதனைத்தான். காவியங்களில் ஏதோ ஓர் அரசனின் அல்லது மகா புருஷனின் கதை இருந்தாலும் அதன் லட்சியப் பின்னணி தருமத்தை நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தில் அவர்கள் வாழும் பொழுது எப்படி நாலு பேருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார்கள். நன்னடத்தையால் பெயர் பெற்றார்கள் என்று சொல்வது தான் அந்த நூல்களின் குறிக்கோள் என்று சொல்லலாம். நீதி இல்லாமல் அறம் இல்லை; நல்லொழுக்கம் இல்லாமல் நற்கதி இல்லை. அதனால் அறத்தைப் போதிக்கிற எல்லோரும் நீதியைச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பிற மொழிகளிலும் நீதி இலக்கியங்கள் உள்ளன. கர்நாடகத்தில் கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் சர்வக்ஞர். இவர்  ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள முடியும். தான் இப்படித்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக சர்வக்ஞர் ஒரு பாடலில் தெரிவிக்கிறார்:
சர்வக்ஞன் என்பவன் கர்வத்தால் ஆனவனோ?
சர்வபேரிடமும் ஒவ்வொன்றைத் தான் கற்றுக் கல்வியின்
மேருவாய் ஆனான் சர்வக்ஞன்
“த்ரிபதி’ எனும் பெயர் கொண்ட மூன்றடிகளால் எழுதப்பட்ட உரைப்பாக்களை இவர் எழுதியுள்ளார். கன்னட நாட்டுப்புறப் பாடல்களின் வழியாகத்தான் இந்த மூன்றடி வடிவ உரைப்பாக்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவம் கொண்டதால் இப்பாடல்கள் மக்களுக்கு உகந்த பாடல்களாயின. த்ரிபதிகள் மூலமாக சர்வக்ஞர் தம் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். எளிய மக்களுக்குப் புரிகின்ற நிலையில் மிக எளிமையாக உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்றார். கேட்டால் போதும் அவை மனதில் தங்கும் இயல்புடையவையாகும்.
சர்வக்ஞர் என்பது இவருடைய இயற்பெயர் அல்ல. மக்களிடமிருந்து கிடைத்த விருதுப்பெயர் அல்லது பட்டப்பெயராக இருக்கலாம் அல்லது கன்னட வீரசைவ வசனக்காரர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையே தமது காவியத்தில் புனைபெயராக வைத்துக்கொள்கிற பழக்கம் கர்நாடகத்தில் உண்டு. அதைப்போல் இவரும் தெய்வத்தின் பெயரையே தனது புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கலாம். அனைத்தும் அறிந்த அறிவன் இறைவன் மட்டும்தான். அவ்விறைவனை மனத்துள் நிலைத்து வைத்துக் கொண்டுள்ளதன் குறியீடாகவும் இது இருக்கலாம்.
அனைவரும் தம் உறவினர் என்று வாழ்ந்த உலகக் குடிமகன் இவர். எனவே, யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்கிறார். சமூகத் தொண்டே வாழ்க்கையின் லட்சியம் என்று கருதி வாழ்ந்தவர். வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களைப் பற்றியும் பாடுகிறார்.
இசையில்லாப் பாட்டும் இன்பமில்லா வாழ்வும்
இசைவில்லா அரசனின் ஆட்சியும் பாழூரின்
மிசை வாழும் கூகை காண் சர்வக்ஞா
அரசன் என்றாலே அத்துடன் தியாகக் குணத்தையும் கொண்டிருக்க வேண்டும். அப்படி அல்லாத அரசனின் ஆட்சி பாழடைந்த ஊரிலுள்ள கூகைபோல் என்கிறார் அவர்.
கோடி வித்தைகளில் உழவே சிறந்தது.
நாட்டில் இராட்டைகளும் சுழலும். இலையெனில்
வாட்டங்கள் மிகுமே சர்வக்ஞா
இப்பாடலில் விவசாயத்தின் சிறப்பை அழகாகக் கூறுகிறார். கோடி வித்தைகளை ஒருவர் கற்றிருந்தாலும் விவசாயத்தை என்றும் மறக்கக் கூடாது. ஆட்சி நிர்வாகத்திற்கான அடிப்படைப் பொருளாதாரமாக இருப்பது விவசாயமே ஆகும்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை’….
என்கிற குறளுடன் இதை இணைத்துப் பார்க்கலாம். வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் ஓர் எளிமையான சூத்திரத்தை நம்முன் வைக்கிறார். அது,
அன்னம் படைப்போருக்கும் உண்மை உரைப்போருக்கும்
தன்போல் பிறரைப் பார்ப்போருக்கும் கையிலாயம்
கண்முன் காட்சியாம் சர்வக்ஞா
அன்னம் படைப்பது, உண்மை உரைப்பது, தன்னைப் போலவே பிறரையும் காண்பது ஆகிய இம்மூன்றும் சர்வக்ஞன் கூறுகின்ற சூத்திரம். இதன் மூலமாகத் தானத்தையும், தானம் செய்கிறவன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறார். இவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக முக்தியை அடையலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதனால், தானம் கொடுப்போனுக்கும் இறைவனுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்கிறார்.
சர்வக்ஞரின் உலக அனுபவம் பரவலானது. அவருக்கு சாஸ்திர ஞானமும் இருந்தது. அதைவிட விவகார ஞானம் அதிகமானது. வாழ்க்கையில் எது சரி, எது சரியல்ல என்ற பார்வையின் மூலமாகத்தான் நீதியை நிலைநாட்டப் புறப்படுகிறார். சில நேரங்களில் அவரது உரைப்பாக்கள் சிந்திக்கவும் வைக்கின்றன. சர்வக்ஞர் புதிதாக எந்தத் தத்துவத்தையும் சொன்னவர் அல்ல. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் எளிமையாகச் சொல்கிறார்.
நல்லவன் இல்லாத ஊரும் கள்ளனுடன் தொடர்பும்
பொய்யன் சொல்லும் – இம்மூன்றும் சகதியில்
முள்ளை மிதித்தாற் போல் சர்வக்ஞா
என்கிறார். நாம் எந்தவிதமான மனிதர்களுடன் பழகுகிறோமோ அதே குணம் நமக்கும் வந்துவிடும். அதனால், எப்பொழுதும் நல்லவருடனான நாட்டத்துடனேயே இருக்க வேண்டும்.
ஒள்ளியருடன் இணைந்த கள்ளன் ஒள்ளியனாம்
ஒள்ளியன் கள்ளனுடன் இணையில் அவனொரு
கள்ளனே ஆவான்காண் சர்வக்ஞா
நல்லவரிடம் இருக்கிற சில குறைகளைப் பொருள்படுத்தக் கூடாது. அவர்களிடம் இருக்கின்ற நற்செய்திகளை மட்டும் காண வேண்டும் என்று கூறும்போது இப்படிக் கூறுகிறார்:
பழங்களில் வளைந்துள்ளது வாழை
பழமது சுவையில் மிகுவதுபோல் பெரியார்தம்
பிழையும் நன்மைக்கே சர்வக்ஞா
பெண்ணைப் பற்றி சர்வக்ஞர் பலவிதமான கருத்துகளைக் கூறுகிறார். நாட்டுப்புறப் பாடல்களில் வரும் கருத்துகளுடன் அதை ஒப்பிடலாம். பெண்ணின் அழகு, ஈர்ப்பு, குடும்ப வாழ்க்கை, சஞ்சல குணங்களை எல்லாம் அழகாகச் சொல்கிறார்.
மனிதருடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் முக்கியக் காரணம் வாழ்க்கையை நாம் காணும் விதம். நமது பார்வைதான் நமது சிந்தனைகளை வழிநடத்துகிறது. எல்லாவற்றையும் எல்லோரையும் பார்க்கின்ற கண்தான் நம் எல்லாச் செயல்களுக்கும் முக்கியக் காரணம்.
கண்ணினால் புண்ணியம் கண்ணினால் பாவம்
கண்ணினால் இகம் பரம் எனவே – உலகிற்கு
கண்ணே காரணம் சர்வக்ஞா
நாம் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வது கண்ணின் மூலமாகத்தான். ஐம்புலன்களில் கண்ணே சிறந்தது. கண் பார்த்ததை மனம் விரும்புகிறது. பல விஷயங்களைப் பேச்சைவிடக் கண்ணே மிகுதியும் உணர்த்துகிறது.
கண்ணைப் போலவே நாக்கைப் பற்றியும் சர்வக்ஞர் கூறுகிறார். நாம் பேசும் பேச்சு அடுத்தவர் மனதில் புண் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிட்டும்.
கத்தியால் ஆனபுண் மாயுமே
சுற்றியாடும் நாவினால் ஆனபுண் – மாயுமோ
சாகும் நாள்வரையும் சர்வக்ஞா
இது திருவள்ளுவர் சுட்டும் “தீயினாற் சுட்ட புண்’ எனும் குறளை நினைவுபடுத்துகிறது.
உடலெனும் புற்றிற்கு நாக்கே பாம்பாகும்
கடும் கோபமெனும் விடமேற தன்மை கெட்டு
மடிய நேரிடும்காண் சர்வக்ஞா
வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் கூறுகின்ற பல விஷயங்கள் சுவையாகவும் மனதில் நிற்கும்படியும் உள்ளன. கடவுள், கோயில், பக்தி, குரு முதலிய விஷயங்களைச் சொல்கிறபொழுது சர்வக்ஞருடைய கற்பனை தெளிவாக விளங்குகிறது. வாழ்க்கையில் கிட்டும் அனுபவம்தான் எல்லா நீதிகளையும்விட மிகப்பெரியது என்பது அவருடைய கருத்தாக உள்ளது.
2009 ஆகஸ்டு 13ம் நாள் சென்னை அயனாவரம் ஜீவா பூங்காவில் கவிஞர் சர்வக்ஞர் சிலையைக் கன்னட அரசு நிறுவப்பாட்டது நம் குலால மக்களுக்கு மணிமகுடம் சூட்டினார்போல் சிலை நிறுவ இசைவளித்தாவர் டாக்டர் கருணாநிதி 

Monday, June 17, 2013

திருநீலகண்ட நாயனார் சிறப்பு விருது வழங்கும் விழா




அந்தமான் குலாலர் சங்கம்

திருநீலகண்ட நாயனார் 16- ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கும் விழா


















Friday, June 7, 2013

பிரம்மாக்கள்

மண்ணுலகின் பிரம்மாக்கள்


நம் முன்னோர்கள் நம்மைவிட ஆயிரம் மடங்கு புத்திசாலிகள்...

அதற்கு ஒரு உதாரணம் தான் மண்பாண்டங்கள்...

வீட்டிற்கு தேவையான அனைத்து உபகரனங்களும் மண்ணிலிருந்து செய்து

 எடுத்துகொண்டனர்...

அதன் உபயோகம் முடிந்ததும் அதனை மண்ணிடமே சேர்த்துவிட்டனர்... எந்த 

பாதிப்பும் இல்லை மண்ணுக்கும் சரி.... மனிதனுக்கும் சரி....

இன்று நாகரீகம் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 

தொடங்கிவிட்டோம்.... அது மண்ணுக்கும் கேடு... மனிதனுக்கும் கேடு....


சிலைகளைக் காசு கொடுத்து வாங்கிப் போய் தங்கள் வசதிக்கேற்றவாறு பூஜை -புனஸ்காரங்கள் எல்லாம் செய்வார்கள். கொண்டாடுவார்கள். ஆனால்அவற்றைப் படைத்த பிரம்மாக்கள் குடிசையிலேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். கிடக்கிறார்கள். வேடிக்கையான உலகம்...