குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, March 16, 2013

கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள்

                          


சித்தரின் திருப்பாதங்களுக்கு வணக்கம்


                 கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள்

                                         20ம்நூற்றாண்டில் மதுரை அருகே வாழ்ந்த 
                       ஒரு உயர்ந்த குலாலர் மகானை பற்றிப்பார்க்கவே இந்த பதிவு



மதுரை ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் உள்ள திருப்பாச்சேத்தி அருகே உள்ள கட்டிக்குளம்
என்ற ஊரில் 
குலாலர்  தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மாயாண்டி சுவாமிகள்
பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர்.இவரிடம் சூடான கம்பி ஒன்று
இருக்கும் இதை சூட்டுக்கோல் எனக்கூறுவர்.தம்மிடம் குறைகளை கூறவருபவரிடம் கைகளை
நீட்டச்சொல்லி தொடச்சொல்வார்.நியாயம் அவர் பக்கத்தில் இருந்தால் அந்தக்கம்பி சுடாது
அவர் அநியாயம் செய்பவராக இருந்தால் கம்பி சுடும்.சூடு தாங்க முடியாமல் அலறும் பக்தர்களை
பார்த்து என்ன அப்பு உண்மை சுடுதா என சிலேடையாக இவர் கேட்பதுண்டு.பின்பு அவரை மன்னித்து அவரின் குறைகளை விளக்கி அவரின் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார்.மதுரையில் இவரை வழிபடும் பக்தர்கள் அதிகம் இவருக்கு ஒரு வழிபாட்டு மன்றம்
வைத்து வணங்கி வருகின்றனர்

இவரின் அற்புதங்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட்
பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காதகுறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை.ரயிலை என்னென்னவோ
முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை.என்ன செய்வதென்று தெரியாமல்.இறுதியில்
அந்த பரிசோதகர் தன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன் தான் ரயில் கிளம்பி
சென்றுள்ளது.இதேபோல் காரைக்குடி அருகே குன்றக்குடி முருகன் கோவிலில் தேர்த்திருவிழாவில் இவர் இருக்க இவர் யாரென்று தெரியாமல் இவரை சிலர் தேரில் இருந்து
இறக்கிவிட்டு இருக்கின்றனர்.இவரை இறக்கியவுடன் தேர் அசையவில்லைதன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன்தேர் சென்றுள்ளது இப்படி பல சித்து
விளையாட்டுக்களை புரிந்தவர் இவர்


திருப்பரங்குன்றம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்த திருக்கூடல்மலையில் தங்கினார்.
அவர் அங்கிருந்தபடி பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பல மகிமைகளை செய்தார். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக கருப்பண்ண கோனார் என்பவருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்கை முடிய உள்ளது என்பதை தெரிந்து  கொண்டவர், கருப்பண்ண கோனார் வேண்டிக் கொண்டதினால் நாற்பத்தி எட்டு நாட்கள் தவம் இருந்து அவருடைய ஜென்ம கர்மாக்களை தன் மீது ஏற்றிக் கொண்டு அவருக்கு உயிர் பிச்சை தந்தாராம். கருப்பண்ண கோனாரே அந்த இடத்தில் சுவாமிகளின் உத்தரவின்படி ஆலயம் மற்றும் சமாதிகளைக் கட்டினாராம். அது போல வெகு காலம் ஆண் குழைந்தையே இல்லாமல் இருந்த ஒரு தம்பதியினருக்கு அவர்களுக்குப் பிறக்க உள்ள பத்தாவது குழைந்தையே ஆண் குழந்தையாக இருக்கும் எனக் கூற அப்படியே அது நடந்ததாம். 
அதன்பின் ஸ்வாமிகள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மார்க்கத்தைப் பரப்பியவண்ணம் பக்தர்களுக்கு அருளாசி தந்து அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை தமது சக்தியினால் தீர்த்து வைத்தார் . பல இடங்களில் வழிபாட்டு மன்றங்களை நிறுவினார்..
 மாயாண்டி  ஸ்வாமிகள் சன்னதி 
இப்படியாகப் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் ஆன்மீகப் பயணத்தில் இருந்தவர் 1930 ஆம் ஆண்டு சமாதி அடைய அவருடைய சமாதி திருக்கூடல் மலையில் நிறுவப்பட்டது. 
                                               குலாலர் தளம்