குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, September 30, 2013

குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 3–வது ஆண்டு விழா

மண்பாண்டங்களின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குலாலர் சங்கம் தீர்மானம்

நெல்லை
மண்பாண்டங்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குலாலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்க கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 3–வது ஆண்டு விழா பாளையங்கோட்டையில் நடந்தது. நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் தலைவர் சேம நாராயணன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, தொழில் அதிபர்கள் நடராஜன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடலைமுத்து என்ற சேகர் வரவேற்று பேசினார். தமிழ்நாடு குலாலர் சங்க தலைவர் ஹரிஹரன் சிவாச்சாரியார், ஆறுமுக நம்பி ஆகியோர் குலாலரின் சிறப்பு பற்றி பேசினர்.
நலத்திட்ட உதவிகள்
இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், உலோக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் வரவால் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க நிதி உதவியும், தொழிற்கூடம், விற்பனைக்கூடங்களை அரசு கட்டித்தர வேண்டும். மண்பாண்டங்கள் செய்வதற்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரம் இலவசமாக வழங்க வேண்டும். பழமைவாய்ந்த மண்பாண்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை மாவட்ட துணை செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட பொருப்பாளர் அய்யப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.