குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, May 16, 2018

தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த '' வேட்கோவர் '' யார் என்று புரிகிறதா குலால

நன்றி
By கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் (ஓய்வு)




கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்களை

 செய்து அளித்த குயவர் பெருங்குடி மக்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றனர். தொழில்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது மட்பாண்டத் தொழில். மனிதன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கியது புதிய கற்காலத்தில் (சங்ஜ் நற்ர்ய்ங் அஞ்ங்). அவனுக்கு அப்பொழுது உணவையும், நீரையும் சேகரித்து வைத்துக்கொள்ள மண்பானை போன்ற ஒரு பாத்திரம் தேவைப்பட்டது. களிமண்ணைப் பிசைந்து உருட்டி கைகளால் மண்பானை செய்து, வெயிலில் காயவைத்து பயன்படுத்தினான். இவ்வாறு கைகளால் செய்த பானைகள்   பழுப்பு நிறமுடைய - சொரசொரப்பான பானைகள் புதிய கற்கால இடங்களில் - அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன


இதற்குப் பின்னர் வருகிற இரும்பு உலோகக் காலமான பெருங்கற்காலம் மனிதன் நாகரிகத்தில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. தங்குவதற்கு வீடுகள், இரும்புப் பொருள்கள், வண்ணக் கல் மணிகள், சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகள் போன்றவை அக்கால நாகரிகத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது. பானைகளில் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சூளையில் வைப்பதால் பானையின் உட்பகுதி கறுப்பாகவும் வெளிப்பகுதி சிவந்த நிறமாகவும் காணப்படும். இத்தகைய கறுப்பு - சிவப்பு நிற பானை ஓடுகள் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் காணப்படுகின்றன. இராமநாதபுரம் அருகே 30.கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள "தேரிருவேலி' என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் "கொற்றன்' "நெடுங்கிள்(ளி)' போன்ற பெயர்கள் பண்டைய தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.



இத்தகைய பானை ஓடுகளில் குறியீடுகள் (எதஅஊஊஐபஐ) பண்டைய தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டு - பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டுச் சிறப்பு, பொருளாதார நிலை, கல்வி அறிவு, உணவு உற்பத்தி செய்யும் நிலை போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ளப் பண்டைய பானை ஓடுகள் பெரிதும் உதவுவதால், தொல்லியல் ஆய்வில் இவை முக்கியமான சான்றாகவும் விளங்குகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாகப் பயன்படுத்திய பொருள், மட்பாண்டங்களே ஆகும். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பொங்கல் பண்டிகையின் போது மண்பானை வைத்து பலர் பொங்கலிடுகின்றனர்.




தமிழகம் அயல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகம் மற்றும் கலாசாரத் தொடர்பு குறித்து அறிந்து  கொள்ளவும், மண்பானை ஓடுகள் பெரிதும் உதவுகின்றன. அரிட்டைன், ரெளலடட், ஆம்பொராமதுஜாடி போன்ற ரோமானிய பானை ஓடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கரூர், கொடுமணல், மாங்குடி, மரக்காணம், அழகன்குளம், அரிக்கமேடு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம், நாகப்பட்டினம், பெரியபட்டினம் முதலிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் தொன்மை சிறப்புமிக்க மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.



மட்பாண்டங்கள் செய்யும் குயவர் பெருமக்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்கள், "வேட்கோவர், கலம் செய்கேரி, மண்வினை மாக்கள், மண்மகன்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், குறியீடுகளுடன் காணப்படும் உலோகக் கால மட்பாண்டங்கள்குறியீடுகளுடன் காணப்படும் உலோகக் கால மட்பாண்டங்கள்




பண்டைக் காலத்தில் கிராம சபைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பானைகள் ஓட்டுப்

பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்'' (அகம். 77:7-8)
இறந்தவர்களை மண் பானைக்குள் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பதை, ""சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்''என மணிமேகலை குறிக்கிறது. சோழ மன்னன் கிள்ளிவளவன் இறந்தபொழுது அவனைப் புதைக்க,

தாழியைச் செய்யும் குயவனைப் பார்த்து ஐயூர்முடவனார் கேட்பதாக ஒரு பாடல்  கோவே கலஞ்செய் கோவே') புறநானூற்றில் வருகிறது. இன்னொரு பாடலில், "போரில் மாண்ட என் கணவரை அடக்கம் செய்யும் ஈமத்தாழியிலேயே என்னையும் சேர்த்து அடக்கம் செய்ய சற்றே அகன்ற வாயுடைய பெரிய தாழியாகச் செய்து தர வேண்டும்' என்று வேட்கோவை வேண்டுகிறாள் (புறம்-256) என்ற செய்தி காணப்படுகிறது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் முதுமக்கட்தாழிகள் ஆதிச்சநல்லூர், கொற்கை, அமரிதமங்கலம், பூம்புகார், செம்பியன் கண்டியூர், கோவலன் பொட்டல், எடமணல் (சீர்காழி அருகில்) முதலிய பல இடங்களில் தொல்லியல் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


பிற்கால வரலாற்றிலும் "வேட்கோவர்' சிறப்பிடம் பெற்று விளங்குவதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. மண் பானை செய்பவர்கள் "வேட்கோவர், வேட்கோ, கலமிடும் குசவன், மண்ணுடையார், பெருங்குசவன்' என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது


.
குயவர்கள் கோயில் ஊழியர்களாகப் பணிபுரிந்துள்ளனர். திருக்கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள் போன்றவற்றை செய்து அளித்துள்ளனர். திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவியரால் அளிக்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடும் கல்வெட்டில்,


""கலங்களும் மற்றுஞ் சால்களும் குடங்களும் பெருந்திருவமுதுக்கு பானைகளும் சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும்  இடும் குசவன்''

எனக் குறிப்பிடப்படுகிறது. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்கு அமுது படைக்கப்படும் மண்பானை "கூன்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலில் மடங்கள், மடைப்பள்ளிகளிலும் அவர்கள் பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நிலங்களும் அளிக்கப்பட்டன. கிராம சபைகளும் அவர்களுக்கு நிலம் அளித்துள்ளது. இவ்வாறு அளிக்கப்பட்ட

நிலம் "குசக்காணி, குசவன் நிலம், குசப்பட்டி, குலால விருத்தி, வேட்கோவக்காணி' என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. கோயிலில் பணிபுரிபவருக்கு வீட்டுமனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. குயவர்கள் செய்யும் தொழிலின் மீது குசக்காணம், சக்கர காணிக்கை, திரிகை ஆயம் போன்ற வரிகளும் விதிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வந்து வழிபடும் பக்தர்களின் வசதிக்காக உணவு அளிக்கப்பட்டுள்ளது. அது "சட்டிச்சோறு' எனக் குறிப்பிடப்படுகிறது. அதற்காக அளிக்கப்பட்ட நிலம் "சட்டிச்சோறுபுறம்' என அழைக்கப்பட்டது.


நன்னிலம் அருகே உள்ள திருவீழிமிழலைத் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏழு நாள்கள் நடைபெற்ற போது குயவர்கள் அந்த ஏழு நாள்களும் "அடுகலன்களும் நீர்கலன்களும்' அளிக்க தானம் அளிக்கப்பட்டதாக முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருக்கோயில்களுக்கும் வேட்கோவர்கள் தானம் அளித்துள்ளதை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் "ஊர் கணக்காக' செயல்பட்டு வந்ததை திருவீழிமிழலை கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. நாகப்பட்டினத்தில் பெüத்த விகாரம் அமைக்க ஆனைமங்கலம் என்ற ஊர் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அளிக்கப்பட்டது. அதனை வரையறுக்கும்பொழுது சாத்தமங்கலம் என்ற ஊரின் சார்பாக வேட்கோவன் நேந்திரன் சாத்தனான நானூற்றுவ பெருங்கோவேளான் கையெழுத்திட்டதை ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது.



மனிதனின் எல்லா சடங்குகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குவதைப் போன்று தமிழக பண்பாடு - வரலாற்றில் வேட்கோவர்கள் முக்கிய இடம் பெற்று விளங்குவதை வரலாற்றுச் சான்றுகளால் அறிந்து பெருமை கொள்ள முடிகிறது. இக்கட்டுரை, "வேட்கோவர்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1979-ஆம் ஆண்டு நடத்திய "தமிழ்நாடு அரசு கருத்தரங்கில்' படிக்கப்பெற்று நூலில் இடம்பெற்றுள்ளது.



No comments: