குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, February 27, 2013

சாவித்ரி கவுரி விரதம்


சாவித்ரி கவுரி விரதம்

தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தார் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மவுன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மலையில் பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோதி முறங்களில்.. ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

திருச்செந்தூர் பாண்டிய குலாலர் மடத்தில் முப்பெரும் விழா




                திருச்செந்தூர் பாண்டிய குலாலர் மடத்தில் முப்பெரும் விழா நடந்தது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த குலாலர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் பாண்டிய குலாலர் மடத்தின் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு, மாசித்திருநாள் அன்னதான விழா நடந்தது.
பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் கணபதி சேகர் வரவேற்றார். பொருளாளர் முத்துகிருஷ்ணன் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் கணபதி, செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், கணபதி, முருகன், நடராஜன், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைவராக ஸ்ரீவைகுண்டம் மாயாண்டி, செயலாளராக ஆழ்வார்திருநகரி மாயாண்டி சேகர், பொருளா ளராக மணக்கரை ஐயப்பன், துணைத்தலைவராக வள்ளியூர் விஸ்வநாதன், துணை செயலாளராக சேரகுளம் சுப்பையா, அன்னதான கமிட்டி உறுப்பினர்களாக ஆழ்வார்திருநகரி சேகர், சுப்பிரமணியபுரம் கணபதி, சட்ட ஆலோசகர்களாக விசாலாட்சி, சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர். மாசித்திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

Tuesday, February 26, 2013

மண்பாண்டக் கலையின் வளர்ச்சி


மண்பாண்டக் கலையின் வளர்ச்சி


முன்னுரை

மட்பாண்டம் என்ற சொல் மண்ணால் உருவாக்கப்படும் பொருட்களைக் குறிக்கும். அவ்வாறு மண்ணால் பொருட்களை உருவாக்கும் இத்தொழில் மட்பாண்டக் கலை எனப்படும். "கண்ணுக்குப்புலப்படாத நுண்தொலைகளுள்ள (Porous) பாண்டப்பொருள் அனைத்தும் பாண்டங்கள் எனப்படும்" எனக் கலைக் களஞ்சியம் விளக்கம் தருகிறது. இதன் மூலம் பாண்டம் என்பது மட்பாண்டத்தைக் குறிக்கிறது.
மட்பாண்டக் கலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் பண்பாட்டின் எச்சங்களாகவும் காணக்கிடைக்கின்றன. "ஹரப்பா மொகஞ்சதாரோவின் காலம் கி.மு. 3200-க்கும் 2500க்கும் இடைப்பட்டது" என்பர். ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மட்பாண்டங்களைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் ஹரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வின் மூலம் கண்டுணர்த்தப் பட்டிருக்கிறது. மனிதன் அழிந்து போகக் கூடியவன். அவனால் படைக்கப்படும் படைப்புகள் கலை வடிவில் காலந்தோறும் நிலைபெற்றுக் கொண்டிருப்பவை.
"மட்பாண்டக் கலையின் தோற்றம் வளர்ச்சியினைப் பரந்துப்பட்ட நோக்கில் ஆராயும் முகமாக அதன் பொதுக்கலைத் தன்மையினையும் அதனின்று அது நுண்கலையாக வளர்ச்சி பெற்றமையும், இதன் தொடக்க காலம் முதல் இக்காலம் வரை இன்ன பிற கலைகளோடு பெற்று வந்துள்ள தேர்ச்சியையும், வளர்ச்சியையும் பற்றிக் கூறுவதாய் இக்கட்டுரை அமைகிறது.
மட்பாண்டம் பற்றிய தமிழகக் கண்ணோட்டம்
தமிழகத்திலேயும் மட்பாண்டக்கலை தொன்மைக் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். இலக்கிய இலக்கணங்களில் மட்பாண்டங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருப்பதைக் காணும்போது அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவை புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிகிறது.
"தமிழ் மக்களது படைப்பு விலங்கு வடிவில் உள்ள கட்ட மண்ணாலாண தாழிகளும், தாழிகளுள் சில கலைப்பொருள்களுமாகக் கிடைத்துள்ளன" மட்பாண்ட வரலாற்றின் தொன்மையை ஆராய்பவர்கள் ஆதிச்சநல்லூர் புதை பொருட்களைக் காட்டுகின்றனர்.
சிற்பக்கலைக்கு உரிய பத்து செய்பொருட்களில் மண்ணும் ஒன்றென்பதைத் திவாகர நிகண்டும் சுட்டுகிறது.
"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் கதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிலை
பத்தே சிற்பத் தொழிற் குறுப்பாவன"
மேலும் சங்க இலக்கியங்களான புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை போன்றவற்றிலும் இன்னபிற இலக்கியங்களிலும் மட்பாண்டம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அதற்குப் பின்னால் வந்த காலங்களிலும் படைப்பின் தரமும், கலை நயமும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. "சென்னை மாநிலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் கிரிகிரி என்ற ஊரில் செய்தவை பல அகில உலக பொருட்காட்சிச் சாலைகளில் பாராட்டு பெற்றுள்ளன. மதுரையில் செய்யும் கருநிற மட்பாண்டங்கள் மிகச் சிறந்தவை. சேலத்தில் ஓவியம் வரைந்த மட்பாண்டங்கள் தயாராகின்றன."
"தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் பழைய பாவைகள், விலங்குகள், மனிதர்கள் முதலியன அலங்கரிப்புள்ளவை. (முதுமக்கள் தாழிகள் என வழங்கும் சவப்பானைகளோடு கிடைத்த பானைகளில் கோயமுத்தூர் ஜில்லாவில் கிடைத்த மெருகுகொடுத்த பானைகள் விசேஷமாகக் கருதப்பட்டன" என்ற செய்திகளும் உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் கருப்பு, சிவப்பு நிறப் பாண்டங்களே செய்யப்பட்டிருக்கின்றன. ஏனை கிரேக்க ரோமனிய நாடுகளைப் போல் பச்சை, நீலம் நிறமுடைய பாண்டங்கள் இருத்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் சக்கர உதவியினால் நேர்த்தியான பானைகளை வனைந்திருக்கின்றனர். "மலையாள ஊராளிக் குறும்பர், சிங்களத்திலுள்ள வேடர்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்கள், சைபீரிய யாகுட்சுகள் போன்றோர் சக்கர உதவியின்றியே பானை வனைந்தனர்" என்ற செய்தி கிடைக்கிறது.
"தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவலூர் வட்டம் கீழ்வாலை என்னும் ஊரிலுள்ள வெவ்வேறு மூன்று குன்றுகளின் குகைப் பகுதிகளிலும், குன்றைச் சூழ்ந்துள்ள புன்செய் நிலப்பகுதிகளிலும், கருப்புறிச்சுடுமண் ஓடுகளும், மெல்லிய வழுவழுப்பான சிவப்பு மற்றும் கருப்பு நிற ஓடுகளும் முதுமக்கள் தாழிகளின் உடைபாடுகளும் பெருமளவு சிதறிக் கிடக்கின்றன. இவையனைத்தும் கி.பி. 1,2 - ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை எனக் கொள்ளலாம்". எனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மட்பாண்டக்கலை தோற்றம் பெற்றிருக்கின்றது என்பதை அறிய முடிகிறது.
தமிழகத்தில் மட்பாண்டக்கலையின் வளர்ச்சி
தமிழகத்தின் மட்பாண்டக் கலை வளர்ச்சியினைப் பற்றி ஆராயுமிடத்து மட்பாண்டக்கலை - பொதுப்படைப்பு, மட்பாண்டக்கலை நுண்படைப்பு என்ற இருபெரும் பகுதிகளாகப் பாகுபடுத்திப்பார்த்தல் பயன்தரும். ஏனெனில் முன்னது வாழ்வியற் பயன்பாடுடையதாகும் பின்னது கலை முருகியல் உணர்வும் இன்பத்தையும் அளிப்பதாய் உள்ளன.
மட்பாண்டக்கலை - பொதுப்படைப்பு
மனித வாழ்க்கைக்குப் பயன்படும் விதத்தில் அமைந்த தொழிலையே பொதுக்கலை என்று பார்த்தோம். தேவை என்ற பயன்பாட்டு நிலையிலேயே ஆரம்பகாலத்தில் இக்கலை இன்றியமையாத சேவைகளில் ஒன்றாகப் பயன்பட்டிருக்கின்றன. மட்பாண்டம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் சுரைக்குடுக்கை, பாறை இடுக்குகள் போன்றவற்றில் நீரைச் சேமித்து வைத்தான் என்ற செய்தியை அறிவதன் மூலம் மட்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின் பயன் கருதிய நிலையிலேதான் வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும் என்பதை ஊகிக்கவியலும். அக்கால கட்டத்தில் இக்கலையின் இன்றியமையாமை உணரப்பட்டுமிருந்த அளவிலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவிலும் சுமார் ஐந்து மைல் தொலைவிற்குள் ஒரு குயவரையாவது காண முடியும் என்பதனின்று இக்கலையின் தேவையை அறிந்துகொள்ள இயலும். வேளாண்குடி மக்களிடையே புழக்கத்திலுள்ள மட்பாண்டங்களாலும் இதை நிறுவலாம்.
அறிவியல் வளர்ச்சியினால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில்வர், ஈயம் போன்ற இன்னபிற பாத்திரங்கள் வருகைக்கு முன் மட்பாண்டங்களே அதிகம் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. மனிதன் பிறந்தது முதல் அவனது இறப்புவரை சில மட்பாண்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. தண்ணீர் குடிக்க, உணவு சமைக்க, சாப்பிட, தானியங்கள் சேமிக்க என பல நிலைகளில் பயன்பாடுடைய பொதுக்கலையாகப் பல்வேறு வடிவமைப்புகளில் இக்கலை வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.
மட்பாண்டக்கலை - நுண்கலை படைப்பு
நுண்கலை, பொதுக்கலையிலிருந்து வேறுபட்டதும் வரலாற்று அடிப்படையில் பிற்பட்டதும் ஆகும். கலைநயமும், நேர்த்தியும், வேலைப்பாடும் மிகுந்த படைப்புகளை நுண்கலை என்கிறோம். மட்பாண்டக்கலையைப் பொறுத்தவரை நுண்கலைப் படைப்பு மேற்சுட்டிய சிறப்புகளை உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது. இது கண்ணால் கண்டும் மனத்தால் உணர்ந்தும் மகிழத்தக்கது. பயன்பாடு என்ற தேவை நிலையிலிருந்து மாறி உணர்வுப் பூர்வமான நுண்கலை தோன்றுவதாயிற்று.
"பண்டைக்கால எகிப்தியர்கள் பொதுக்கலையிலிருந்து படிப்படியாக விலங்குகள், தெய்வ உருவங்கள், இயற்கைப் பொருட்கள் போன்றவற்றைப் படைக்கலாயினர்" என்ற ஆங்கில நூற்குறிப்பு இதை உணர்த்தும், மனிதன் தன்னுடைய அறிவினாலும், மனோபாவத்தாலும், கற்பனையாலும் நுண்கலையைப் படைக்கலானான். அதன் மூலம் கிடைக்கப்பெறும் உணர்வால் மகிழ்வையும் ஆன்மீக நிறைவையும் அடைந்தான்.
பொதுக்கலையாகத் தோற்றம் கொண்ட கலை காலப்போக்கில் நுண்கலையாகவும் பயின்று வருதல் கூடும். தண்ணீர் முகந்து குடிக்கக் குவளை பயன்படுகின்றது. இது பொதுக்கலை, அக்குவளை கழுத்துப்பகுதி, கைப்பிடி, வாய்ப்பகுதி வேலைப்பாடமைந்த கலைநயம் வாய்ந்ததாகக் காட்சி தருமாயின் அதுவே நுண்கலைத் தன்மையையும் பெற்றுவிடுகின்றது.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் இக்கலை சிற்பக்கலை வடிவிலேயேயும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. தெய்வம், மனிதர், விலங்கு, பறவை முதலிய வடிவங்களைக் கற்பனை உருவங்களாக அமைத்து வழிபாட்டுப் பொருள்களாகப் போற்றி வந்தனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சிறுதெய்வ வழிபாடு நடந்து வந்து கொண்டிருப்பதனால் இக்கலை மேலும் வளர்ச்சி தேர்ச்சியும் பெறுவதாயிற்று. "பல வண்ணங்களின் வடிவங்களிலும் தயாரிக்கப்படும் பாண்டங்கள் கண்ணையும் கருத்தையும் கவருவதுடன் அன்றாட வாழ்வின் அவசியத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. நாட்டுப்புறக் கலைகள் (கைவினை) பாரம்பரியத்தின் படிவங்களாகும். குடும்பச் சொத்துக்களாக வாழையடிவாழையென வந்த வம்சா விருத்திகளாகவும் விளங்குகின்றன".
மட்பாண்டக்கலை என்பதற்கேற்றாற் போல், வாழையடிவாழையாய் பல புதிய நிலைகளில் வடிவமைப்பு, வர்ணம் தீட்டுதல் கலைநயம் முதலிய நுண்கலைத் திறமைகளுடன் வளர்ச்சி பெற்று வந்து கொண்டுள்ளது.
மட்பாண்டக்கலையும் பிற கலைகளும்
மட்பாண்டக் கிராமியக் கைவினைக் கலைக்குப் பெருமை சேர்ப்பதாய் இருப்பதோடு பிற கலைகளோடும் பொருத்திப் பார்க்கும் வகையில் பயனுடையதாய் அமைவதைக் காணலாம். அறிவியலின் முன்னோடியாகவும் இது திகழ்கிறது. "சக்கரத்தையும் துடுப்பையும் கண்டுபிடித்தவர்கள் தாம் தொழில், அறிவியல் ஆகியவற்றின் வரலாற்றின் முன்னோடிகளாவார்கள்" என்பர் அறிஞர். அவ்வகையில் இக்கலை இசை, கல்வி, ஓவியம், சிற்பம், மருத்துவம் எனப் பல கலைகளுக்கும் பயன்பட்டு வந்திருக்கின்றது.
அறிவியல்
சக்கரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் இக்கலை அறிவியலுக்கு முன்னோடியாகவும், மனித இனம், நாகரிகம் ஆகியவற்றை அறிந்து கொள்ளப் பேருதவியாக இக்கலை சான்றாதாரமாகப் பயன்படுகிறது.
கல்விக்கலை
கல்விக்கு முன்னோடியாக இருந்தது மட்பாண்டக்கலையே எனலாம் "பாபிலோன் மற்றும் ஆரியர்கள் முதலானோர் மட்பாண்டங்களில் எழுத்து முறையைப் பயன்படுத்தியதாகத் தெரிய வருகிறது. அம்மக்கள் பெரும்பாலும் ஈரமான மட்பாண்டங்களில் எழுதி வைத்தனர்". களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப் போல் அமைத்து அப்பலகையின் ஈரம் உலர்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலர வைத்துப் புத்தகமாக உபயோகித்திருக்கின்றனர் என்ற செய்திகளின் மூலம் களிமண் சுவடியாக இக்கலை கல்விக்கலைக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இசைக்கலை
இசைக்கருவிகளும் மண்ணினால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. புல்லாங்குழல், நாதசுவரம், மிருதங்கம் (கடம்), தாளப்பானை, மண்முழவு, உடுக்கை போன்ற கருவிகள் மண்ணால் செய்யப்பட்டவை.
"கஞ்சத்தால் செய்வது குமுழவம்
கருங்காலியால் செய்வது இடரிகை
செங்காலியால் செய்வது சல்லி
வேம்பாற் செய்வது மத்தளம்
போன்று சல்லி, இடக்கை ஒழித்த மற்ற கருவிகளெல்லாம் இவை ஒன்றும் பெறாத காலத்து மண்ணாற் செய்வது உத்தமம்" என்று ஆளவந்தார் தம் நூலில் ஆய்ந்து கூறியுள்ளார். கொசவன்பட்டி என்னும் ஊரில் இன்றும் மாரியம்மன் கோயிலில் "மண்முழவு" பயன்பட்டு வருவதைக் காணலாம்.
ஓவியக்கலை
வர்ணங்கள் தீட்டுவதற்கும் மண் ஒரு கலவைப் பொருளாகப் பயன்பட்டிருக்கின்றது. இன்றளவிலும் நாட்டுப்புறங்களில் உள்ள குயவர்கள், சாமி சிலைகள், குதிரைகள் போன்ற சிலைகளுக்கு மண்கொண்டு வர்ணம் தீட்டுவதையும் வேலைப்பாட்டிற்காகக் கோலமிடுவதையும் காண முடிகிறது. கோயில்களில் மதிற்சுவர்களிலும், வீடுகளிலும் மண் ஒரு வர்ணக் கலவையாகப் பயன்படுத்தப் படுகிறதை அறியலாம்.
சிற்பக்கலை
சிற்பக்கலை வளர்ச்சி பெறுவதற்கு முற்பட்ட தொடக்க காலங்களில் மண்ணைக் கொண்டுதான் சிற்பம் செய்திருக்கக்கூடும். இரும்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மரத்தாலும், கல்லாலும் சிலை செய்திருக்கக்கூடும். இன்றளவிலும் மண்ணைக் கொண்டுதான் குயவர்கள் சிலையைச் செய்கின்றனர். மாறாக ஒன்று சிமெண்டு உதவிகொண்டு சிலை செய்யத் தலைப்பட்டு அதில் வளர்ச்சி பெற்றிருப்பினும் சிலை உருவாக்கத்தின் முன்னோடியாக இருப்பவை மட்சிலைகளே.
மருத்துவக்கலை
மண்ணிற்குச் சில மருத்துவக் குணங்கள் உண்டு. "மண்பாண்டச் சமையல் ருசியான உணவாக இருப்பதுடன் குடற்புண் போன்ற நோய்கள் வராமல் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக இருக்கச் செய்கிறது. "சித்த மருத்துவத்தில் மண் மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறதை அறிய முடிகிறது. "தலைவலி, கண்நோய், உடல்சூடு, கை கால் வீக்கம், முடி உதிர்தல் , பொடுகு, தேமல், சிரங்கு, படை போன்ற நோய்களை மண் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்" என்பர். எனவே மண் மருத்துவக் கலைக்கும் பயனுடையதாய் உள்ளது.
கட்டிடக்கலை
செங்கல் என்றாலே அது மண்ணைத்தான் குறிக்கும். கோவில் கோபுரங்களையும், மாட மாளிகைகளையும் செங்கற்களாற்றான் எழுப்பினர். "சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சி செய்த வரலாற்றாளர்கள் அதன் காலத்தை கி.மு. 3200-க்கும் கி.மு. 2500-க்கும் இடைப்பட்டது என்று கூறக் காண்கின்றோம்.". சிந்து சமவெளியில் சுட்ட செங்கற்களான வீடுகளையும், கட்டட அமைப்புகளையும் அறியப் பெறுவதனின்று அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மண் கட்டிடக் கலைக்கும் பயன்படுமாற்றை இதனால் அறியப்பெறும்.
மண்பாண்டக் கலை மனிதக் கரங்கொண்டு சக்கரத்தின் உதவியோடு படைக்கப்படும் கைவினைக்கலை என்பதை அறிவோம். இக்கைவினைக்கலையால் உருவாக்கப்படும் மட்பாண்டங்கள் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பின்மையால் நலிவுற்றுப் போகும் போக்கையும் உணர முடிகிறது. ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்புகளினாலும், மக்கள் விரும்பும்படியாகவும் புதிய எந்திரத்தயாரிப்பு, புதிய கலவைகள், புதிய வர்ணங்கள் போன்றவை மூலம் புதிய படைப்புகளைப் படைக்குமளவிற்கு இக்கலை ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்டவை மூலம் மட்பாண்டக்கலையின் தோற்றம், தொடக்க காலத்தில் தேவை அடிப்படையில் பொதுக்கலையாகவும், பின்னர் நுண்கலையாகவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதை அறிய முடிகிறது. இதன் தோற்ற காலம் கி.மு. 3500 க்கும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. சக்கரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே சூளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் உலகளாவிய நிலையில் இக்கலை சில பொதுமைகளை கொண்டிலங்குகின்றது என்பதும் புலனாகிறது

Monday, February 25, 2013

தயாரிப்பு பயிற்சி


மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி




தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது
 தூத்துக்குடி மாவட்ட கலை பண்பாட்டுத் துறை, சாரா கலைப் பயிற்சி நிலையம், சாரா கலை வளர் மையம் ஆகியவை சார்பில், மண்பாண்ட கலை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தென்காசி ஆய்குடியைச் சேர்ந்த நடராஜன், பிச்சையம்மாள் ஆகியோர் இந்த பயிற்சியை அளிக்கின்றனர்.
 நாளொன்று 60 மாணவ, மாணவிகள் வீதம் மூன்று நாள்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மண்பாண்ட பொருள்கள் செய்வதற்கான மண்ணை குளத்தில் இருந்து எவ்வாறு எடுப்பது, மண்ணை பதப்படுத்துவது எப்படி, பொருள்களாக தயாரிப்பது எப்படி என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
 பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.


மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க ஆட்சியர் அனுமதி


    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 மண்பாண்ட கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கான மண்ணை ஏரிகளில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்வதற்கு ஆட்சியர் எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை அனுமதி வழங்கினார்.
 மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் குலாளர் நல வாரிய பிரதிநிதிகள், மண்பாண்டத் தொழில் செய்வதற்கு ஏரிகளில் இருந்து களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
 தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் விதி 6(2)-ன்படி நபர்  ஒருவருக்கு 800 மாட்டு வண்டிகள் அதாவது 80 டிராக்டர் மண் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 5 மண்பாண்டத் தொழிலாளர்கள் வீதம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 100 மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார்.

குலாலர் மண்டபம்






                       1         குலாலர் கல்யாண மண்டபம்,
                                          லட்சுமி நகர்,
                                        தேவாங்கபுரம்,
                                         திருப்பூர்-2.
                                      போன்:0421-2244907.

                       2                  அவினாசி 
                              குலாலர் கல்யாண மண்டபம்,

                       3    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 
                                கருங்குருவிக்கு உபதேசம் செய்த 
                           லீலை` கோவிலுக்குள்
                         உள்ள குலாலர் மண்டபம் 

                  4               கம்பம்
                                குலாலர் மண்டபம்



                           









Saturday, February 23, 2013

தமிழகத்தின் மண்பாண்டக் கலை

 மண் சார்ந்த கலை

    தமிழகத்தின் மண்பாண்டக் கலை மிகவும் பழைமை வாய்ந்ததாகும்.
கைத்திறனுடன் வண்ணம் கூட்டி மண்பாண்டம் செய்வதே ஒரு
கலையாக மாறிவிட்டது என்று கூறலாம். அகழ்வாராய்ச்சியில்
(Archaeology)
 தோண்டி எடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள்
மண்ணால் செய்யப்பட்டவையே என்பது இங்கு அறியத் தக்கதாகும்.
மண்சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை மணிமேகலைக்
காப்பியம் ‘மண்ணீட்டாளர்’ என்று குறிப்பிடுகிறது.
நுண்மாண்     நுழைபுலம் இல்லான் எழில்நலம்        மண்மாண் புனைபாவை அற்று
             (குறள் : 407)

என்று வளோர்களின் கலை நுட்பத் திறனைச் சிறப்பிக்கின்றார்
வள்ளுவர்.

    தமிழகத்தில் மண்ணாலான புழங்கு பொருட்கள், தெய்வ
உருவங்கள், குதிரைகள் போன்றவற்றைக் கலைத் திறனோடு செய்யும்
கைவினைஞர்கள் 
குலாலர், குயவர் என அழைக்கப் படுகின்றனர்.
மண் சார்ந்த தொழில்களே இவர்களது பூர்வீகமான குலத் தொழிலாகும்.குலாலர் இன மக்கள் அடுப்பு. மண் சட்டி, பானை, குளுமை
(தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை
அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து
வருகின்றனர். மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப்
பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான
பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர்.

    பானைகள் ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டியாக விளங்கி
வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும்
மருத்துவப் பயன்பாடு மிக்கவை ஆகும். கைவினைக் கலைஞர் ஒருவர்
மண்ணிலேயே நாகசுரத்தை உருவாக்கி இசையோடு வாசித்தும் காட்டிச்
சாதனை செய்துள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.


சுடுமண் சிற்பங்கள்

    சிற்பக் கலைக்குரிய பத்துச் செய்பொருட்களில் மண்ணும் ஒன்று
என்பதைத் திவாகர நிகண்டு.
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிலுக் குறுப்பாவன

என்ற பாடலின் வாயிலாக எடுத்துரைக்கிறது.

    தெய்வங்களுக்கு மண் சிலை வடித்து வழிபடுவது தமிழகத்தில்
தொன்று     தொட்டு     இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக்
கோயில்களில் கம்பீரமாக அமைந்துள்ள அய்யனார், முனியப்பன்,
மதுரை வீரன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன்,
பேச்சியம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை, யானை,
காளை
 போன்ற தெய்வ வாகனங்களும் வளோர்களால் கலை
நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகின்றன.

    களிமண்ணை எடுத்து வந்து நன்றாகக் காயவைத்துக் கல், தூசி
நீக்கி, நீருற்றிப் புளிக்க வைத்து, ஆற்று மணல், வைக்கோல் சேர்த்து
மிதித்துக் குழைத்துப் பெரிய பெரிய தெய்வ உருவாரங்களும்
குதிரைகளும் செய்யப்படுகின்றன. பின்பு அவை நெருப்பில் போட்டுச்
சுடுமண் சிற்பங்களாக மாற்றப்படுகின்றன. வண்ணங்கள் பூசப்பட்டுக்
கோயிலில் நிலைநிறுத்தப் பட்டு வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன.
குதிரை ஓடுவது போன்றும் நிற்பது போன்றும் அதன்மேல் தெய்வங்கள்,
அரசர்கள் அமர்ந்திருக்கும் நிலையிலும் சிற்பங்கள் மண்ணாலேயே
வடிவமைக்கப் படுகின்றன. மண் சிற்பங்களில் விதவிதமான
ஆபரணங்கள் செய்தல், முக பாவங்களை அமைத்தல், உடல் நெளிவு
சுழிவுகளை அழகு படச் செய்தல் போன்றவற்றை வளோர்கள் கலை
நுட்பத்துடன் செய்து காட்டுகின்றனர்.

    கல்லால் சிற்பங்களை வடிப்பதற்கும் மண்ணால் சிற்பங்கள்
செய்யப் படுவதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அதாவது
கற்சிற்பங்கள் மேலிருந்து கீழ்நோக்கி உருவாக்கப்படும். ஆனால்
மண் சிற்பங்கள் கீழிருந்து மலோகச் செய்யப்படும். மேலும் கல்
சிற்பங்களில் வண்ணங்களைத் தீட்ட இயலாது. மண் சிற்பங்களில்
தேவையான வண்ணங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்க்கலாம்.

    மண் சார்ந்த இக்கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்களாக
மட்டுமின்றித் தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் பிரிக்க
முடியாத கூறாகவும் அமைந்துள்ளன. சுடுமண் கலை வடிவங்களைத்
தெய்வங்களுக்கு நேர்த்திக் கடனாக வாங்கி வைத்து வழிபடும்
வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் உள்ளது. நோயினால் பாதிக்கப்
பட்டவர்கள் நோய் குணமடைவதற்குத் தெய்வத்திடம் வேண்டிக்
கொள்கின்றனர். நோய் குணமடைந்தவுடன் பாதிக்கப்பட்ட உடல்
உறுப்பினைப்     போன்று     மண்ணால் செய்து     அதனைத்
தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குகின்றனர்.
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
மண்சார்ந்த
கலைகள்
மரம்சார்ந்த
கலைகள்
ஓலைசார்ந்த
கலைகள்
காகிதம்சார்ந்த
கலைகள்
பிற
கலைகள்

Friday, February 22, 2013

குலாலர் குல பட்ட பெயர்கள்



                    1.  வேளார்
                      2.  குயவர்
                      3.  மண் உடையார்
                      4.  உடையார்
                      5.  கொசவர் 
                             6.   பூசாரி
                      7.  குலாலர்
                      8.  குசவன் 
                      9.  கைவினைஞர்


  • குசவன், குயவன், கலந்தருநன், கும்பகாரன், குலப்பன்,  தண்டதரன், மட்பகைவன், மண்கூட்டாளன், மண்ணரிவாளன்,மண்ணுக்குடையவன், மண்மகன், மிருத்துகரன்
  • குயம், குசம்,  சக்கரம், தட்டுக்கோல் 
  • பிரம்மா மண்ணரிநார், 
  • குலாலன் மண்ணரிவாளன் , மண்மகன்
                        




    தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் குலாலர் இனத்தினர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

                        

    கவிதைகள்

                                            ( 1 )         ஒளிக்கதிர் பரப்பி
                                                           ஒலி முழக்கமிட்டு
                                                           ஒழி எனும் ஓட்டாண்டி அகற்றி
                                                           முடியுமா எனும் கேள்வி நீக்கி
                                                           முடியும் என்று முழக்கமிட்டு
                                                           புதியதோர் பொன்னுலகம் படைத்திடுவோம்
                                                           குலம் கூடி செம்பியன் பாதையில்
                                                           சந்தன சந்தானமும் படைத்திவோம்
                                                           கூடுங்கள் குலாலர் குலமே!



    ஒருவனின்  காலடியில்  வாழ்வதை விட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ  மேல் ....

    Thursday, February 21, 2013

    A.S.சுப்புராஜ்..50-வது ஆண்டு நினைவு அஞ்சலி

                        குலாலர் இனத்தைச் சேர்ந்த அமரர் A.S.சுப்புராஜ் Ex-MLA (1957-1962) - 

                                            BODINAYAKKANUR.(22.02.1963) 50-வது ஆண்டு நினைவு அஞ்சலி



                                                 பங்கஜம் குடும்பத்தில் பிறந்த பவளமே
                                               குயவர் குலத்தில் பிறந்த விடிவெள்ளியே
                                      போடிநகருக்கு மணிமகுடம் சுட்டிய மணிமகுடமே
                                            உயிர் காக்க மருத்துவமனை தந்த உத்தமரே
                                                     மலைச்சாலை தந்த மாமனிதரே
                                                     பெண் கல்வி தந்த பொக்கிஷமே
                                                            தாகம் தீர்த்த தர்மவனே
                                                      எங்களின் அன்புக்கு உரியவரே
    எங்களின் நினைவு அஞ்சலியை ஊங்களின் மலர்பாதங்களில் சமர்பித்து                                               வணங்குகிறோம்
                                                                     இங்கணம்
                                                      குலாலர் ஜாதி பொதுமை
                                                           குலாலர் பாளையம்
                                                           போடிநாயக்கனூர்





    Wednesday, February 20, 2013

    குலாலர் குலவள்ளல் A.S.சுப்புராஜ்

    குலாலர்குலவள்ளல் A.S.சுப்புராஜ்,எம்.எல்.ஏ
     
      A.S.சுப்புராஜ் 1914ஆம் வருடம் ஜுலை மாதம் 28ஆம் போடிநாயக்கனூர் பங்கஜம் குடுபத்தில் 


    பிறந்த இவர் (ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி)விக்டோரியா மேல்நிலைப்பள்ளியில் கல்வி

     கற்றார்.போடிநாயக்கனூர் அழகண்ணன் சொட்டியார்,எம்.எல்.ஸி முன்னாள் தென்னிந்திய

    குலாலர் சங்கத் தலைவரின் பேரனும் அ.சுப்பன் சொட்டியாரின் மகனும் ஆவார்.

    ஆற்றிய பணிகள்


     • உத்தம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் 1952-1957 

    • போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் 1957-1963

    • போடிநாயக்கனூர் நகர்மன்ற தலைவர்

    • நடுவராயத்தின் தலைவர் (Bench Court)

    • வியாபாரிகள் சங்கத்தலைவர்

    • கூட்டுறவு வீடு கட்ட்டமனை சமூகத்தலைவர்

    • விவசாய வங்கி தலைவர்

    • நில அடமான வங்கி தலைவர்

    • கூட்டுறவு விற்பனையக சங்கத்தலைவர்

    • சேதுராமன் நினைவு குழந்தைகள் இல்லத்தலைவர்

    • நாகம்மாள் விடுதி தலைவர்

    • தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தலைவர் போடி

    • போடிநாயக்கனூர் பிரந்திய தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தலைவ
    ர்
     
    • சீதாலட்சுமி மில் இயக்குநர்


    தர்மகர்த்தா-இராமேஸ்வரம் தேவாஸ்தானம் இராமேஸ்வரம்

    செயலாளர் 

    • ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி(விகடோரியா நினைவு மேல்நிலைப்பள்ளி) 

    போடிநாயக்கனூர்

    • பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போடிநாயக்கனூர்

    உறுப்பினர்

    • தக்கார் பாபா வித்தியாலயம் சென்னை

    • மதுரை கல்லூரி நிர்வாக குழு

    • காந்திகிராம பல்கலைகழக நிர்வாக குழு



    நாட்டுப்பணி
    இந்தியா நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றார்.பெண்கல்விக்காக பாடுபட்டார். தமிழ்நாட்டின் விவாசயம் மின் உற்பத்தி, தொழிற்சாலைகள் மேம்படுத்த தமிழக முதல்வர் 1960ல் தமிழக நிதியமைச்சர் C.சுப்பிரமணியம் தலைமையில் அ.சு.சுப்புராஜ், C.R.ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவை லண்டன்(UK) அனுப்பினார். அன்றைய மதுரை மாவட்ட மக்களின் தொழில் வளத்தை மேம்படுத்த தேனியில் போஜ்ஜாராஜ் மில்லை தோற்றுவித்து இந்தியா நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்களால் திறக்க செய்தார். போடி முதல் போடிமெட்டு 23கி.மீ மலைசாலை திட்டத்தை 23.40இலட்சத்தில் நிறைவேற்றினார் போடிமெட்டு மலைசாலை அமைக்க அரசின் திட்டமதிப்பீடு அதிகமான போது தன் சொந்த செலவில் தானே முன்னின்று போடிமெட்டு மலைசாலை நிறைவேற்றிய வள்ளல் . இன்று தொண்டி-கொச்சி தேசியநெடுஞ்சாலையாக உள்ளது. போடிநாயக்கனூரில் அ.சு.சுப்புராஜ் சத்திரத்தை நிறுவி பசி என்று வந்தவருக்கு உணவளித்த பாரி வள்ளல்.அனதைக்குழந்தைகளை காக்க போடிநகரில் சேதுராமன் நினைவு குழந்தைகள் இல்லத்தை நிறுவினார் இன்று A.S. சுப்புராஜ் நினைவு குழந்தைகள் இல்லமாக சீறும் சிறப்புமாக இயங்கி வருகிறது.

    குலாலர் சமுதயத்திற்கு ஆற்றிய பணிகள்
    • B.C பிரிவில் இருந்த குலாலர் சமுதயத்தை MBC பிரிவிற்கு மற்றினார்
    • இராமேஸ்வரம்,பழநி,திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர் போன்ற இடங்களில் குலாலர் மண்டபங்களை நிறுவினார்.
    • தேனிமாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா காலங்களில் தீச்சட்டி,மண்பாண்டங்கள் விற்க்க குலாலர் பொதுமனையை ஏற்படுத்த இடம் வழங்கினார். போடிநாயக்கனூரில் குலாலர்பாளைத்தில் வசிக்க குலாலர் மக்களுக்கு தன் சொந்தநிலத்தை வழங்கினார். போடிநாயக்கனூரில் குலாலர் மக்களுக்காக மண்பாண்டங்கள் விற்க்க செய்ய இடம்,சுடுகாடு, கோவிலுக்கு இடம் என 3.7.1944ல் குலாலர் ஜாதி பொதுமைக்கு தானமாக வழங்கினார். மற்ற சமுகத்தினருக்கும் தன் ஏராளமான சொத்துக்களை தானமாக வழங்கினார். “ தோன்றின் புகழ்ளோடு தோன்றுக” என்ற திருவள்ளுவரின் குறளுக்கேற்ப வாழ்ந்தார். 1963வருடம் பிப்ரவரி மாதம் 22ம் நாள் வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.மிக குறுகிய காலமே வாழ்தாலும் இவர் செய்த அறப்பணிகளால் மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறது இவரது புகழ்.
    தொகுப்பு

    FLOWERDIMAND
    ,
    குலாலர் ஜாதி பொதுமை
    ,
    குலாலர்பாளையம் ,

    போடிநாயக்கனூர்,

    தேனிமாவட்டம்.

    Friday, February 15, 2013

    குலாலா பேரவை தொடக்கம் kulala


         

          குலாலா பேரவை தொடக்கம்



                    தருமபுரியில் மாவட்ட குலாலா பேரவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவுக்கு அந்தப் பேரவையின் மாவட்டத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
     மாநில துணைத் தலைவர் எஸ்.மாணிக்கம், மாவட்டச் செயலாளர் எஸ். சுகுமாரன், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கே.பழனிமுருகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வுப் பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     நிகழ்ச்சியில் பங்கேற்றோர் குலாலா சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறப்புப் பெறுவது குறித்தும், அதிக மதிப்பெண்கள் பெறுவதும் குறித்தும், திறமைகளை வளர்ப்பது குறித்தும் வலியுறுத்தினர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Tuesday, February 12, 2013

    குலாலமித்திரன்

    குலாலமித்திரன் (இதழ்) 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம்

    வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பத்ராதிபர் ஆவார். இது

    குலால மக்களை இணைக்கவும் அவர்களை முன்னேற்றவும் உதவிய

    கருத்துக்களைக் கொண்ட வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள்

    ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    குடியினால் வரும் கேடுகள்


    கள்விலை பகர்வோர் கள்ளினை நுகர்வோர்
    கள்ளருந்து தற்குடன் படுவோர்
    கள்ளருந் துனரை மகிழுநர் நரகில்
    கற்ப காலங் கிடந் தழுந்தி
    விள்ளருந் தீய மலப்புழு வாகி
    மலத்தினை நுகர்ந்து பின்னிறந்து
    விள்ளருங் கொடிய ரெளரவ நரகில்
    மீட்டு மீட் டுழன்றுநாள் கழிப்பபர்


    முதல் முறையாக தமிழில் வெளிவந்த இதழ்
    குலாலமித்திரன் - 1931 இல் குலாலர் சமுதாய முன்னேற்றம் கருதி வெளிவந்த இதழ், ஒரு இதழ் மட்டுமே தொகுப்பில் உள்ளது,


    நன்றி : குலாலமித்திரன் - மே 1932

    டெல்லி தமிழ் குலால சங்கம் delhi kulalar


             டெல்லி தமிழ் குலால சங்கம் 1975 ம் ஆண்டு மே மாதம் K-79 ஹௌஸ்

              ஹாஸ் (Hauz khas) நியூ டெல்லி - 110 016 இல் தொடங்கப்பட்டது இதில்

              18 நபர்கள் கொண்டு ஆரம்பிக்கபட்டது

          
                                       திரு A. முத்துசாமி, தலைவர் (1975 - 1977)


          1975ம் ஆண்டு முதன் முதலாக திரு A. முத்துசாமி 

          சூரக்குளம் சிவகங்கை மாவட்டம், தலைவராக 


          தேர்ந்த தெடுக்கப்பட்டார் அவர் 1975 - 1977 வரை   


          சங்கத்திற்கு பணியாற்றினார் 


         




                  அவரால் டெல்லியில் கோவிந்த்புரி என்ற இடத்தில் டெல்லி தமிழ் 

                  குலால  சங்கத்திற்காக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்    


                  உருவாக்கப்பட்டது



    குலால இளைஞரணி சமூக நல சங்க கூட்டம்

    கரூர் குலால இளைஞரணி சமூக நல சங்கம் ஆலோசனை கூட்டம் தலைவர் ராமலிங்கம் தலைமையில் கரூரில் நடந்தது. மாவட்ட கட்டிட தொறியலாளர் சங்க தலைவர் மணிவேல், முருகேசன் முன்னிலை வகித்தனர். மாநில கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில், கட்டிட தொழிலாளர்களுக்கு முக கவசம், ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணம் வழங்க கோரியும், கல்வி, திருமணம், விபத்து நிவாரணம் நிதியுதவி களை காலதாமதமின்றி வழங்கி கோரியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சங்க செயலாளர் பெரியசாமி, மகளிர் அணி தலைவர் மலர்விழி, அமைப்புசாரா மகளிரணி தலைவர் புனிதா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Monday, February 11, 2013

    பயிற்சி அளிக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்


    மண்பாண்ட கலைபொருட்கள் செய்ய அரசு பயிற்சி அளிக்க வேண்டும்: சென்னை மாநாட்டில் தீர்மானம்
    சென்னை, ஜன. 20-

    தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க வடசென்னை மாவட்ட மாநாடு இன்று நடந்தது. மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மண்பாண்ட தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாக்க, அரசு மண்பாண்டம் தொழில் செய்வதற்கான உதவியும், மண்பாண்டங்கள் செய்து சூளை வைத்த பிறகு அதனை வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் தொழிற்கூடங்களையும், விற்பனைக் கூடங்களையும் அரசு செலவில் கட்டித் தரவேண்டும்.

    மண்பாண்டங்கள் செய்வதற்கேற்ற வகையில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின் சக்கரங்களையும் அதற்கான மின்சாரத்தையும், மாவட்டத்திற்கு 100 மின்சக்கரம் வீதம் அத்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் சென்ட்ரல் தொழிற்பயிற்சி நிலையத்திலும் தமிழக அரசின் தொழிற்பயிற்சியிலும் தையற்கலை, தச்சுவேலை பயிற்சி போன்று கலைநயமிக்க மண்பாண்டங்கள் செய்யவும் ஒரு பிரிவை உருவாக்கி பயிற்சி அளித்து மண் கலைஞன் என சான்று வழங்கி தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் அளித்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் ஹென்றி, பாவலர் கணபதி, எஸ்.என்.பழனி, ஆனந்த் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்.